“நடிகர் விஜய்யே மௌனமாக இருக்கும் போது, மற்றவர்கள் எல்லாம் பதறி என்ன கதறி என்ன கப்போகிறது? என்று சிபிஎம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்க்கு சிம்பு ஆதரவு

விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையொட்டி நாளை வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் “ஜனநாயகன்” படத்திற்கும், நடிகர் விஜய்க்கும் நடிகர்கள் சிம்பு, சிபிராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் காங்கிரஸ் எம்பி’க்களான மாணிக்கம் தாகூர்; ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

விஜய்யே வாயை மூடி இருந்தால்..?

இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ படம் விவகாரம் குறித்தும், நடிகர் விஜய்யை விமர்சித்தும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

அதில், “தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கும் தணிக்கை வாரியத்தின் செயல் குறித்து சம்பந்தப்பட்ட ஜனநாயகன்-னே வாய்மூடி மௌனியாக இருக்கிறார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

வாரியத்தை குறை சொன்னால் ஒன்றிய பாஜக அரசை குறை சொன்னதாக ஆகி விடுமோ என்ற அச்சத்தில் படம் வெளியாவது தள்ளி போனாலும் பரவாயில்லை தன்னை பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று தான் எதுவும் சொல்லாமல் இருக்கிறார் என்றும் மற்றவர்கள் எல்லாம் பதறி என்ன கதறி என்ன ஆகப்போகிறது? – என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது இந்த பதிவுக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள் சம்பந்தப்பட்ட நடிகர் விஜய் தான் பேச வேண்டும் அவரே வந்து மௌனமாக இருக்கிறார் இது பல்வேறு சங்கைகளை இருப்பதாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பேசப்படுகிறது.