“உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல், பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற லெவல் பண்ணையார்தனம்…!” என்று அதிமுக தவெக தலைவர் விஜய்யை விமர்சித்துள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் தவெக கட்சியின் ‘செயல்வீரர்கள்’ கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் விஜய், திமுக, அதிமுக என இரு கட்சிகளையும் விமர்சனம் செய்து பேசினார். “திமுக,அதிமுக ஊழல்கள் கட்சிகள், இருகட்சிகளும் பாஜகவுக்கு அடிகையாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.
அதற்கு, அதிமுக தரப்பில் பதிலடி தரப்பட்டுள்ளது.

பனையூர் பண்ணையார்
அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள “எக்ஸ் தள” பதிவில், “பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
அதிமுக என்னும் பேரியக்கம்
‘மத்திய அரசிற்கு அடிமை’ என்பது அண்ணா திமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…!
கைக்கட்டி நின்றது – எந்தப் படம்..?
தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..?
இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..?
செங்கோட்டையன்..?
அண்ணா திமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில்
கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?
நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ?
ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு
நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல்,
என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில்
72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ?
அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…!
டாக்டர் பட்டமே கொடுக்கலாம்..!
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற லெவல் பண்ணையார்தனம்…!
இதற்காக உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்…!
அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….!
நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..!
அறிவாலய குப்பையோடு,
பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக..” என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்கட்டுள்ளது.






