வருமானத்தை மறைத்ததாக கூறி, ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது

நடிகர் விஜய வீட்டிலும், சென்னை பனையூர் அலுவலகத்திலும் கடந்த 2015-ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள திடீர் சோதனை நடத்தினர். அதாவது, விஜய் நடித்த “புலி” படம் வெளியாவதற்கு 2 முன்பு தான் இந்த சோதனை நடைபெற்றது.
சோதனையில் ஏராளமான ஆவணங்ககையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், கடந்த 2015-2016ஆம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய என்று தவெக தலைவர் விஜய் கணக்கு காட்டியிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 2015-ஆம் ஆண்டு கைப்பற்றிய ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்ல  என்று கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, இவ்வாறு  வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சம் ரூபாய்யை அபராதம் விதித்தது வருமான வரித்துறை.

கடந்த 2022-ம் ஆண்டு ஜூன ் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில், நடிகர் விஜய வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அபராதம்விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்க இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும், வருமானத்தை மறைந்ததாக விஜய்க்கு எதிராக வருமான வரித்துறை சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலையில், இருதரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை இன்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.