தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் சமீபத்தில் பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த விவாதத்தை சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு தரப்பிலும் விளக்கங்கள் அழைக்கப்பட்டு உள்ளன.
₹5,000 வழங்கப்பட்டதற்கான காரணம் : வழக்கமாக மாதம் ₹1,000 வழங்கப்படும் நிலையில், திடீரென ₹5,000 வழங்கப்பட்டது.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.முன்பணம் ரூ.3,000, அதாவது பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.
கோடைகால சிறப்பு நிதி:-
கோடைகால வெப்பத்தைச் சமாளிக்கவும், குடும்பச் செலவுகளுக்காகவும் கூடுதலாக ரூ.2,000 சிறப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
அரசு சொல்லும் விளக்கம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் ‘நடத்தை விதிகள்’ அமலுக்கு வரும். அப்போது அரசு நிதியை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தைத் தடுக்க முயற்சிப்பதாகக் கூறி, அரசு முன்கூட்டியே பணத்தைச் செலுத்தியுள்ளது.
”தேர்தல் நேரத்தில் உரிமைத் தொகை வழங்குவதைத் தடுக்கச் சிலர் சூழ்ச்சி செய்வதால், மகளிருக்குச் சேர வேண்டிய உரிமை தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது வழங்கப்பட்டுள்ளது.” – அரசு தரப்பு விளக்கம்.
நிதி முறைகேடு புகாருக்கு விளக்கம்
மகளிர் உரிமைத் தொகைக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதி மாற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்குத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது.
திட்டத்திற்கான நிதி முறையாக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு, நிதி விதிகளின்படியே வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் நலனுக்கான எந்த நிதியும் இதற்காகத் திசைதிருப்பப்படவில்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
எதிர்காலத் திட்டம்
2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மகளிர் உரிமைத் தொகையை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.
.






