காதலர் தினமான இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சமீப நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்தது. ஆனால் இப்போது மீண்டும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தை கண்டுள்ளது.

ஆனால் வெள்ளியின் விலை மட்டும் மாற்றம் இல்லாமல், அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை காட்டிலும் தங்கம் நான் நாளுக்கு நாள் விலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

வாரத்தின் கடைசி நாளான இன்று ஒரு கிராம் ரூ. 160 உயர்ந்து ரூ. 14,560-க்கும், ஒரு சவரன் ரூ. 1,280 உயர்ந்து ரூ. 1,16,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று சவரனுக்கு ரூ. 1,600 குறைந்திருந்த நிலையில் இன்று ரூ. 1,280 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 280 -ஆக தொடர்ந்து விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ. 2,80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலைகள் அதிகரித்தாலும் மற்றொரு பக்கம் வெள்ளியில் முதலீடு செய்தவர்களை காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்