வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் (டிச.28,29) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளுக்கு (எஸ்ஐஆர்) பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஜனவரி 18-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 1,68,825 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும் (படிவம் 6) அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் முதற்கட்டமாக இன்றும், நாளையும் (டிச.28,29) நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதேபோல ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.