சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய முதல்வர், மதுரையில் எய்ம்ஸ் பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிறது என்றும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்று நம்பிக்கை சூளுரைததுள்ளார்.
மேலும் பேசிய அவர், “ஒன்றிய அரசால் மதுரை எய்ம்ஸ் அறிவித்து பணிகள் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், ஒரே நேரத்தில் 2 கல்லூரிகளை அறிவித்து திறந்து வைத்துள்ளோம். அடுத்ததும் நமது திராவிட மாடல் ஆட்சிதான்; மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

எய்ம்ஸ் – முதல்வர் விமர்சனம்
முக்கியமாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு 2015-ல் வெளியானது. ஆனால், 2026 ஆகியும் பணிகள் முழுமையடையாததைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “ஒன்றிய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் ஒரு செங்கல் நிலையிலேயே உள்ளது” என்று விமர்சித்தார்.
“அதே காலகட்டத்தில் தமிழக அரசு சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அறிவித்த உயர்கல்வி நிறுவனங்களை சட்டக் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரியை மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடித்து, இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது,” என்று முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.
இதுதான் திமுக அரசு
சிவகங்கையில் இன்று ஒரே நேரத்தில் இரண்டு முக்கியக் கல்லூரிகளை திறந்து வைத்ததை, எய்ம்ஸ் தாமதத்திற்கு எதிராகத் தனது அரசின் நிர்வாகத் திறமைக்கான சான்றாக அவர் முன்வைத்தார்.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:
மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற ‘திராவிட மாடல்’ திட்டங்களே மீண்டும் தங்களை ஆட்சிக்குக் கொண்டு வரும் என்ற கருத்தை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.






