ரூ.213 கோடி மதிப்பீட்டில் கட்டபட்ட மதுரை கோரிப்பாளையம் உயர்மட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் முகஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சும்மா, 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்து கோரிப்பாளையம் பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாநகரில் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என கூறப்படுகிறது. கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பாலம் – தூரம்
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை மொத்தம் 39 மேல்தளப் பணிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமுக்கம் முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை சேவை சாலை பாலத்தின் இடதுபுறத்தில் 7.50 மீட்டர் அகலத்திற்கு 2 வழித்தடமாகவும், வலது பகுதியில் 10.50 மீட்டர் அகலத்திற்கு 3 வழித்தடமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
சேவை சாலை எல்லையில் மழைநீர் வடிகால் மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கு தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை பாலத்தின் அணுகு சாலை அமைத்தல், பாலத்தின் கீழ் இருபுறமும் சேவைச் சாலை அமைத்தல், வர்ணம் பூசுதல், மின்விளக்கு பொருத்துதல் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருது சகோதரர்களின் சிலை
அதனை தொடர்ந்து, சிவகங்கை சூரக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் சிலையை மதுரையிலிருந்து காணொளி மூலம் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
கன்மாய் – பூங்கா திறப்பு
மேலும், மதுரையில் சீரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாய் மற்றும் பூங்காவையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
படகு சவாரி, நடைபயிற்சி பாதை, யோகா மையம், நூலகம், திறந்தவெளி ஆம்பி தியேட்டர், உணவகம், ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், பேட்மின்டன் மைதானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த பூங்கா பகுதியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






