வரும் சட்டமன்றத் தேர்தலில் 200தொகுதிகள் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, மதுரை நடைபெற்ற திமுக தென்மண்டல நிர்வாகிகள் கூட்டத்தின் முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற திமுக தென்மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

சித்திரை திருவிழா போல..,

அப்போது அவர் பேசுகையில்,
“சித்திரைத் திருவிழா போல் கூடி இருக்கும் உங்களை பார்த்து உற்சாகம் அடைகிறேன்” என்றார்.

“இனி நாம தான்.. இனி எப்போதுமே நாம தான்.. நாடாளுமன்றத்தில் 40க்கு 40 என்று வெற்றி பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை தொடங்கி இந்தியாவில் எந்தக் கட்சியும் செய்ய முடியாத வகையில் செயலி மூலமாக, 1.10 கோடி குடும்பங்களை உடனடியாக இணைத்தோம்” என்று பெருமிதம் தெரிவித்தார்.

2026 தேர்தலுக்கான ‘மிஷன் 200’

​தேர்தல் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தொண்டர்களுக்கு அவர் ஒரு முக்கியமான இலக்கை நிர்ணயித்தார். ​”தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்” என்பதை ஒரு சவாலாகவே முன்வைத்தார்.

இதற்காக இப்போதே களப்பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்காளர் இல்லத்திற்கும் அரசின் சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வருக்கு செங்கோல்

இந்தத் திமுக பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மூர்த்தி தலைமையிலான திமுக நிர்வாகிகள் மேடையில் செங்கோல் வழங்கி சிறப்பித்தனர்.