பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார் அளிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தனியார் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணங்களை வழக்கத்தை விட 2 முதல் 4 மடங்கு வரை உயர்த்தி வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

புகார் அளிப்பதற்கான தொடர்பு எண்கள்
ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கத் தனித்தனி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
- தலைமையகம் (சென்னை): 1800 425 6151 (இலவச எண்)
- சென்னை மண்டலங்கள்: 99442 53404 (வடக்கு), 97905 50052 (தெற்கு).
பிற மாவட்டங்கள்:
- மதுரை (90953 66394),
- கோயம்புத்தூர் (91235 93971),
- விழுப்புரம் (96773 98825),
- வேலூர் (98400 23011),
- சேலம் (78456 36423),
- ஈரோடு (80569 40040),
- திருச்சிராப்பள்ளி (90660 32343),
- விருதுநகர் (90257 23800),
- திருநெல்வேலி (96981 18011) மற்றும்
- தஞ்சாவூர் (95850 20865).
மேற்கண்ட எண்களுக்குத் தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ்ஆப் (WhatsApp) மூலம் குறுஞ்செய்தி மற்றும் குரல் பதிவாகவோ பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் நடவடிக்கை இல்லையே..?
கட்டண கொள்ளை தொடர்பாக, அரசு சார்பில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாலும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் பண்டிகை காலங்களில் மிக.., மிக.., அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.






