பெரம்பலூர் அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போலீசாரின் வாகனம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு!
பிரபல ரவுடியான வெள்ளை காளி உள்ளிட்ட 2 குற்றவாளிகளை போலீசார் புதுக்கோட்டையில் கைது செய்தனர். அவர்களை போலீசார் காவல் வாகனத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரவுடியின் பிண்ணனி:-
ரவுடி வெள்ளை காளி மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பழிக்குப் பழியாக கடந்த 22 ஆண்டுகளில் 21 கொலைகள் நடந்ததைத் தொடர்ந்து, மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகிய 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், தாக்குதலில் இருந்து 4 காவலர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். மேலும் குற்றவாளிகள் இருவரும் தற்போது போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
போலீசாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனவும், இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.






