தணிக்கை சான்றிதழ் வழங்க வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு ஆகியவைதான் இப்போதைய தேவை” என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் பராசக்தி பிரச்னை
தமிழ் சினிமாவுக்கும், தற்போது தணிக்கை வாரியத்திற்கும் இடையே மிகப்பெரிய பிரச்னை சென்று கொண்டு இருக்கிறது.
பொங்கல் பண்டிகையொட்டி நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ நடிகர் விஜயயின் இறுதிப் படமான ‘ஜனநாயகன்’ என இரு படங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்குவது குளறுபடிகளும், தாமதமும் ஏற்பட்டது. ஒருவழியாக பராசக்தி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது. ஆனால் ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சான்றுகள் கிடைக்கவில்லை.
இதற்கு மத்திய அரசு காரணம் என்று ஒருபுறம் சொல்லப்பட்டாலும் இதற்கும், பாஜக அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என பாஜக நிர்வாகிகளான தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் பேட்டி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக நடிகர்கள் சிம்பு, சிபிராஜ் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குநர்கள் சிலரும் தங்கள் ஆதரவை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் கண்டமும், ஆதரவும்
அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது நடிகரின் விஜய் பெயரையும்; படத்தின் பெயரை குறிப்பிடாமல் தணிக்கை வாரியம் செய்வது முறையல்ல.. சரியில்லை.. என்று சுட்டிக்காட்டியுள்ளார், நடிகை கமல்ஹாசன்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணம் இது. முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து அரசாங்க தணிக்கைத் துறையுடன் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட வேண்டும்.சினிமா என்பது ஒரு சூழல் அமைப்பின் கூட்டு முயற்சியாகும். இத்தகைய சீர்திருத்தங்கள் படைப்புச் சுதந்திரத்தை பாதுகாக்கும்.”
“வெளிப்படத்தன்மைக்கும் மரியாதைக்கும் ரசிகர்கள் தகுதியானவர்கள். வெட்டுக்கான எழுத்துப்பூர்வ விளக்கம், காரணம், சான்றிதழ் வழங்கும் விவகாரங்களில் வெளிப்படத்தன்மை அவசியம்.
சினிமா என்பது ஒருதனிமனிதனின் உழைப்பு மட்டுமல்ல. சிறு வணிகங்கள் அடங்கிய கூட்டுக் குழுவின் கூட்டு முயற்சியாகும்.இந்திய சினிமா ரசிகர்கள் பகுத்தறிவும் முதிர்ச்சியும் கொண்டவர்கள். என தெரிவித்துள்ளார்






