பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம். சார்பில் மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று (டிச.22) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தவெக தலைவர் நடிகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ,இந்த விழாவில் தவெக தலைவர் விஜய பேசுகையில், “வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள். உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். தவெக சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் நூறு சதவீதம் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் முகமது அலி, “தமிழ்நாடு அமைதியான மாநிலமாக, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும் இருந்து வருகிறது” என்று தெரிவித்தார். ஈரோட்டில் சமீபத்தில் நடைபெற்ற பரப்புரையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விஜய் கூறிவரும் நிலையில், அவர் முன்னிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு மாநிலமாக தமிழகம் திகழ்வதாக ஆற்காடு நவாப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






