நடிகர் பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘ராஜா தி சாப்’ (The Raja Saab).
திரைப்படம் பற்றிய சுருக்கம்
ராஜா தி சாப்’ ஒரு ஹாரர் – காமெடி கலந்த ஒரு ஃபேண்டசி திரைப்படமாகும். இயக்குநர் மாருதி இப்படத்தை இயக்கியுள்ளார். பிரபாஸ் இதுவரை நடித்த ‘பாகுபலி’, ‘சலார்’ போன்ற அதிரடிப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, இதில் நகைச்சுவை மற்றும் காதல் கலந்த ஒரு புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள் – படக்குழு
இப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. பிரபாஸ் (ராஜா சாப் வேடத்தில்), மாளவிகா மோகனன், நிதி அகர்வால், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, எஸ்.எஸ். தமன் இசையமைத்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி இப்படத்தை தயாரித்துள்ளது.

பிரபாஸ் பட ‘கதைக்கரு’
இப்படம் ஒரு பழைய அரண்மனை மற்றும் திரையரங்க பின்னணியில் நடப்பதாகக் கூறப்படுகிறது. பணத்தேவைக்காக தனது தாத்தாவின் பாரம்பரிய சொத்தை விற்க முயலும் நாயகன், அங்குள்ள அமானுஷ்ய சக்திகளால் சந்திக்கும் சவால்களை நகைச்சுவையுடன் சொல்வதே இதன் கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாஸ் இதில் தாத்தா மற்றும் பேரன் என இருவேடங்களில் நடித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட்
சுமார் 400 – 450 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிக்கெட் விலை ஏற்றத்திற்கு அரசு அனுமதி!
பிரபாஸ் நடிப்பில் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் ‘ராஜாசாப்’ படத்தின் டிக்கெட் விலை ஏற்றத்திற்கு ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.

ரிலீசுக்கு முந்தைய நாள் இன்று சிறப்புக் காட்சி டிக்கெட் கட்டணம் 1000 ரூபாய். ரிலீஸ் நாளில் நாளை பத்து நாட்களுக்கு சிங்கிள் ஸ்க்ரீன் டிக்கெட் கட்டணம் ரூ.297 மற்றும் மல்டிப்ளெக்ஸ் டிக்கெட் கட்டணம் ரூ.377 எனவும் விற்க அனுமதி ஆந்திர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

பவன் கல்யாண் – பிரபாஸ்
இதற்கு முன் ஆந்திர மாநிலத் துணை முதல்வரான பவன் கல்யாண்’ நடிப்பில் வெளியான “ஓ.ஜி” (O.G) படத்திற்கும் ஆந்திர அரசாங்கம் இதே மாதிரி கூடுதல் விலை டிக்கெட் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






