பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்

மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது இளம் நடிகையிடம் பாலியல் அத்துமீறல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஜனவரி 9-ந்தேதி கொச்சி துறைமுகம் பகுதியில் தனது படத்தில் நடிக்க வந்த நடிகையிடம் அவர் இவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் பேரில் கேரள
ரஞ்சித்தை கைது செய்து எர்ணாகுளம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜாமீன் வழங்க கோரி ரஞ்சித் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த எர்ணாகுளம் முதல் வகுப்பு நீதிமன்ற நீதிபதி கே.கே. பாலகிருஷ்ணன், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி, சம்பவம் நடந்ததாக கூறப்படும் கொச்சி துறைமுகம் பகுதிக்கு செல்லக்கூடாது, ஒவ்வொரு திங்கட்கிழமையும் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும், விசாரணைக்காக அழைத்தால் உடனடியாக ஆஜராக வேண்டும், தனது பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Posts

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

தவெக கட்சியின் பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், தவெக கட்சியின் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் பிரகாசம் என்கிற குட்டி. தவெக வேட்பாளர் பட்டியலை…

மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி ஆகும் ‘நஸ்ரியா’

“நேரம், ராஜாராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா” போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நஸ்ரியா. அவர் அதிகம் மலையாள சினிமா படங்களில் தான் நடித்துள்ளார். நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா. சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *