அண்ணாமலையை சொந்த கட்சியான பாஜகவே மறந்து விட்டது என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, பாஜக தேர்தல் பரப்புரை பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்தது குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “அண்ணா எனும் பசுவின் மீது அமர்ந்த காகம் தற்போதைய திமுக என அண்ணாமலை விமர்சிக்கிறார். அண்ணாமலை பாஜகவில் என்ன நிலைமையில் இருக்கிறார் என்றே தெரியவில்லை, அண்ணாமலை பாஜக கட்சி வேண்டும், என்று செல்கிறாரா? வேண்டாம் என்று செல்கிறாரா? என்றே தெரியவில்லை. அண்ணாமலையை சொந்த கட்சியே மறந்து விட்ட நிலையில் அவர் கூறுவதை இனி மக்கள் மத்தியில் எடுபடாது..” என்று தெரிவித்தார்.
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், திராவிடம் மாடல் 2.0 அரசு மீண்டும் வரும் என்றும் குறிப்பிட்டு பேசினார். கூட்டணி கட்சிகள் குறித்தும், கூட்டணி பங்கீடு குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது






