திமுக பிரமுகரான வைஷ்ணவி, விரைவில் பாஜகவில் இணைய போவதாக சமூக வலைத்தலங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இச்செய்தி குறித்து வைஷ்ணவி தரப்பில் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
யார் இந்த வைஷ்ணவி?
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் மற்ற சில பெண்களை போல் இல்லாமல்; கவர்ச்சி காட்டாமல் விதவிதமான வீடியோக்களை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை விளக்கமாகக் கொண்டுள்ளார். 20 வயதான வைஷ்ணவிக்கு, இன்று ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளார்கள்.

முதலில் தவெக
நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபலமானார்.
திமுகவில் இணைந்த வைஷ்ணவி
இந்நிலையில், வைஷ்ணவி, கடந்த மே மாதம் அன்று முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதற்குக் காரணமாக, தமிழக வெற்றிக் கழகத்தில், வேலை செய்பவருக்கு பதவி வழங்கப்படுவதில்லை, புதிதாக நேற்று வந்தவர்களுக்கு தான் பதவி வழங்கப்படுகிறது, என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வீடியோ போட்டா போதுமா?
ஆனால், தவெக-வினர், “இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை போட்டு, பிரபலமானால் போதுமா? கட்சிக்காக என்ன செய்து விட்டார்கள் வைஷ்ணவி” என்று பல்வேறு கேள்விகளை கேட்டார்கள்.

தவெக Vs வைஷ்ணவி
அன்று முதல் இன்று வரை தவெகவினர் Vs வைஷ்ணவி இடைய பனிப்போர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வருகிறது. திமுக பெண் பிரமுகராக மாறிய வைஷ்ணவி, சமூக வலைத்தளங்களில் தவெக கட்சித்தலைவர் விஜய்யை திட்டுவதும், விமர்சிப்பதும் என பதிவுகளை தாறுமாறாக போட்டு வருகிறார்.
மற்றொரு பக்கம், தவெக-வினர், வைஷ்ணவியை எல்லைமீறி “பச்சோதி, துரோகி..” என திட்டிக்கொண்டு வருகிறார்கள்.

பாஜகவில் இணையும் வைஷ்ணவி?
இந்நிலையில், திமுக பிரமுகரான வைஷ்ணவி, விரைவில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான வானதி சீனிவாசன் முன்னிலையில், பாஜகவில் இணைய போவதாக சமூக வலைத்தலங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்தச் செய்தியை வசந்தி என்றும்; தவெக-வினர் கிளப்பி விட்ட “புரளி” தான் என்றும்; யாரும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் திமுக கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
தவெக தரப்பில் “விரைவில், அப்படி நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கிசு.. கிசுக்கப்படுகிறது..!”






