“பவள விழா பாப்பா” என திமுகவை விமர்சித்த விஜய்க்கு எதிராக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று  அக்கட்சியின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு வருகை தந்த அக்கட்சியின் தலைவர் விஜய், தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியார், பெரியார், காமராஜர், அம்பேத்கர், அஞ்சலை அம்மையாரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதைதொடர்ந்து, தவெக 3வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், “பவள விழா பாப்பாவுக்கு வேறு என்ன தெரியும்?, பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும்” என்று திமுகவை விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த  இளங்கோவன், “விஜயைப் பற்றி நாங்கள் யாருமே பேசவில்லை. நாங்கள் புறக்கணிக்கிறோம். பிளாக்கில் டிக்கெட் விற்பவர் ஊழல் குறித்து பேசலாமா?” என்று விஜய்யை சாடினார்.