திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட ரோப் கார் சேவை மிகவும் பிரபலமானது.
அடிவாரத்திலிருந்து மலைக்கோவிலுக்குச் செல்ல இது ஒரு விரைவான மற்றும் நல்லதோரு பயண அனுபவத்தைத் தருகிறது.

ரோப் கார் பயணம் :-
அடிவாரத்திலிருந்து உச்சிக்குச் செல்ல சராசரியாக 3 நிமிடங்கள் ஆகும். மேலும், ஒரு பெட்டியில் 4 நபர்கள் வரை அமரலாம். ஒரே நேரத்தில் பல பெட்டிகள் இயக்கப்படும்.
காட்சி:
இந்தப் பயணத்தின் போது பழனி நகரின் முழு அழகையும், சுற்றியுள்ள இயற்கை காட்சிகளையும் ரசிக்க முடியும் என்று பயணம் செய்த பக்தர்கள் கூறுகிறார்கள்.
கட்டண விவரங்கள்
ரோப் கார் சேவைக்குத் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. (காலத்திற்கு ஏற்ப இவை மாறக்கூடும்):
சாதாரண கட்டணம்: ஒரு நபருக்கு சுமார் 50 ரூபாய் (ஒரு வழிப் பயணம்).
ரோப் கார் சேவை இரத்து
ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் (பொதுவாகப் பௌர்ணமிக்கு அடுத்தடுத்த நாட்கள்) பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படும்.
அந்தவகையில் இன்று, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட ரோப் கார் சேவை இன்று முழுவதும் இரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் வழக்கம்போல் ரோப் கார் சேவை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






