தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகம் வந்த பிரதமர் மோடி, மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையிலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தின் பரபரப்புக்கு இடையேயும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்த பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று முருகனை சாமி தரிசனம் செய்தார்.
பலதர பாதுகாப்பு
பிரதமரின் வருகையை முன்னிட்டு கோயில், மலைப்பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட போலீஸார், 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோயில் முன் காரில் நின்றபடியே பிரமதர் மோடி, 150 மீ தொலைவில் பெரிய தேர் வீதியில் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து கை அசைத்தும், வணங்கியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

முருகனை தரிசித்த பிரதமர்
குடவரை கோயில் பிரகாரத்தை சுற்றிச் சென்ற பிரதமர் மோடி, மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் நின்றபடி சிறிது நேரம் உருக்கமாக வழிப்பட்டார். .
இதைதொடர்ந்து, அர்ச்சகர்கள், பிரசாதம் வழங்கி முருகன் படம் வழங்கினார். இதையடுத்து, மாலை திருப்பரங்குன்றத்தில் இருந்து மெதுவாக விமான நிலையம் அமைந்துள்ள மண்டலே நகரில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றார்.
இதற்கு முன்பு..?
கடந்த 2024 மக்களவைத்தேர்தல், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நேரத்தில் இதுபோல் பொதுக்கூட்டத்திற்கு மதுரை வந்திருந்த பிரதமர் மோடி, மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






