பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டபுள் டக்கர் பஸ் மோதியதில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதில் பஸ்சுக்காக ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த டபுள் டக்கர் பஸ் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து சென்று பஸ் மோதி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை, பாலினம், வயது ஆகியவை குறித்து இதுவரை போலீஸார் எந்த தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. விபத்திற்கு காரணமாக பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் நதியா நார்டன் கூறுகையில், “கடைகள் மற்றும் பார்கள் நிறைந்த ஸ்டாக்ஹோமின் சிபிடிக்கு அருகில் மக்கள் பரபரப்பு நிறைந்த பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்துக்கு அடியில் சிக்கியவர்களை போலீஸாரும், அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் மீடடுள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை” என்று கூறினார்.