சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவில் விமர்சித்த விஜய்க்கு அதிமுக ஐடி வின் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் சீலநாயக்கன்ப ட்டி புறவழிச்சாலை அருகே உள்ள மைதானத்தில் தமிழக வெற்றி கழக கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது தமிழகத்தை ஆளும் திமுக அரசையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

கூட்டத்தில் அதிமுகவை விஜய் விமர்சித்த நிலையில் அதிமுக ஐ.டி.விங் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஐ.டி-விங் தனது ‘எக்ஸ் தளத்தில்’ பதிவிட்டுள்ளதாவது, “நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் Uncle? அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க! அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி,
COPY PASTE செய்தவர் விஜய் என்பதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிற கட்சிகளில் இருந்து நீக்கப்பட்டவர்களை வைத்து கட்சி என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு வைத்துள்ளீர்கள். என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

“யாரோ எழுதிக் கொடுத்ததை, ‘ Action’ என்று சொன்னதும் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார்…! எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்.. என்று கலாய்த்து கூறப்பட்டுள்ளது.

இந்த FDFS டிக்கெட்டெல்லாம் ரூ.2000-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? என்றும் அதிமுக தலைப்பில் தடாலடியாக விமர்சிக்கப்பட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.