தொடர்நது 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்ததி வெற்றிப் பெற்றுள்ளது. இது, இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முதல் வெற்றி இதுவாகும்.

சென்னை Vs டெல்லி

ஐபிஎல். 2026ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் நாணயசுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவால்டு பிரேவிஸ், குர்ஜப்னீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாட, சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பவர்பிளேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 18 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அடுத்து ஆயுஷ் மாத்ரே களம் இறங்கினார்.

சஞ்சு சாம்சன் – சதம்

அதன்பின் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆயுஷ் மாத்ரே 27 பந்தில் அரைசதம் அடித்தார். சஞ்சு சாம்சன் அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 52 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். ஆயுஷ் மாத்ரே 59 ஓட்டங்கள் அடித்திருக்கும் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 56 பந்தில் 115 ஓட்டங்கள் அடிக்க சி.எஸ்.கே. 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்கள் குவித்துள்ளது.

ஷிவம் துபே 10 பந்தில் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது.

சென்னை அணி அபார வெற்றி

சிஎஸ்கேவின் அதிரடி பந்துவீச்சால் திணறிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 189 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் நடப்பு தொடரில் சிஎஸ்கே தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.