நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 6 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு என்ற தனியார் அமைப்பு விலை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விலையை கோழிப்பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்கள் தொடர்ந்து வந்தது. இதனால், கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை 6 ரூபாய் 40 காசுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று 20 காசுகள் குறைக்கப்பட்டு முட்டை கொள்முதல் விலை 6 ரூபாய் 20 காசுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக கோழிப்பண்ணையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
ரூ.6 என நிர்ணயம்
இதில் முட்டை கொள்முதல் விலையை 20 காசுகள் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, நாமக்கல்லில் இன்றுமுதல் முட்டை கொள்முதல் விலை மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டு ரு. 6 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






