தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
Vibe With MKS
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘Vibe With MKS’ என்ற நிகழ்ச்சியில் இளம் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தனது கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நானும் ஒரு ஸ்பின் பவுலர் தான்!
விளையாட்டு வீரர்களுடனான உரையாடலின் போது, முதலமைச்சர் தனது இளமைக்கால விளையாட்டு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
“நானும் சிறுவயதில் தெருக்களில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். நான் ஒரு ஆஃப்-ஸ்பின் பவுலர். எனது தந்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் பேட்டிங் செய்யும்போது நான் அவருக்குப் பந்து வீசியிருக்கிறேன்,” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.

சிம்புவின் விக்கெட்டை வீழ்த்திய முதல்வர்…
இந்தக் கலந்துரையாடலின் போது, சென்னையில் ஒருமுறை நடைபெற்ற ‘நட்சத்திர கிரிக்கெட்‘ போட்டியில் தான் பங்கேற்றதை முதலமைச்சர் நினைவு கூர்ந்தார். அந்தப் போட்டியில், “தான் ஒரு ஆஃப்-ஸ்பின்னராகச் செயல்பட்டதாகவும்,
அப்போது முன்னணி நடிகரான சிம்பு (சிலம்பரசன்) மற்றும் நடிகர் நெப்போலியன் ஆகியோரின் விக்கெட்டுகளை” வீழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கலாய்த்த நெட்டிசன்கள் & எதிர்க்கட்சியினர்
முதல்வரின், இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவியதை அடுத்து சில தரப்பினர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன.
முதல்வர் வீசிய பவுலிங்
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் லெக் ஸ்பின் பௌலிங் போடும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. “அன்று முதல்வர் சொன்னது உண்மைதான்” என்று திமுகவினர் சோசியல் மீடியாக்களில் கொண்டாடி வருகிறார்கள்.
இதைக் கேட்ட நெட்டிசன்கள், அந்த பழைய வீடியோவைத் தேடிப்பிடித்து தற்போது வைரல் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் முதலமைச்சர் விளையாட்டுச் சீருடையில் மிகத் துல்லியமாகப் பந்து வீசி விக்கெட் எடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.






