ஸ்பெஷல் ஃபோட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார், தேவயானி மகள் பாடகி இனியா.
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை தேவயானி. தமிழ், தெலுங்கு , இந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து விட்டார். இவர் நடித்த “சூர்ய வம்சம்” படம் மெ ஹிட. ஆனதுடன், தேவயானியின் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.

தனது கேரியரில் உச்சத்தில் இருக்கும் போதே, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தேவயானிக்கு இனியா மற்றும் பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர்.
கல்லூரி படித்து வரும், தேவயானியின் மூத்த மகளான இனியா 2025-ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகமப சீனியர் சீசன் 5’ (Sa Re Ga Ma Pa Seniors 5) இசை நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார்.

அதுமட்டுமில்லாமல் முன்னணி பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பாடல்களை பாடி வருகிறார். வெளி உலகத்திற்கு தன்னை காட்டாத இனியா, தற்போது தனது விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து “மயில் போல பொண்ணு ஒன்னு..!” என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.









