தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் சட்ட விரோதமாக பணத்தை வைத்து சூதாடிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 13ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் சட்ட விரோதமாக பணத்தை வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாமொழி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான விநாயகசுந்தர், தளவாய், சரவணன், இலங்காமணி, முத்துராமலிங்கம், ராஜகோபால், கருப்பசாமி, பிரபு, நடராஜன், இளங்கோ, அஜித்குமார், கார்த்திகேயன் மற்றும் சேரன் ஆகிய 13 பேர் சேர்ந்து சட்ட விரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, 13 பேரையும் கைது செய்த குலசேகரன்பட்டினம் காவல்துறையினர்,
அவர்களிடமிருந்து சுமார் ரூ.3 லட்சத்து 67 ஆயிரம் ரொக்கப்பணம், சீட்டுக் கட்டுகள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.






