தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விஜய் ரசிகர்கள் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ‘கட்-அவுட், பேனர், போஸ்டர்’ என பலவிதங்களில் கொண்டாடி வந்தனர். ஆனால், ‘ஜனநாயகன்’ படத்திற்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்ததால் படம் பொங்கல் பண்டிகை ஒட்டி வெளியாவது சற்று தள்ளிப்போகி உள்ளது.

விஜய் ரசிகர்கள் வைத்த கட் அவுட்

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள லட்சுமி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் 70 அடி உயரத்தில் கட் அவுட் வைத்திருந்தனர்.
அனுமதி பெறாமல் வைத்ததாக
வெளியாகாத ஜனநாயகன் திரைப்படத்திற்கு விஜய்யின் போஸ்டர் அடங்கிய கட் அவுட்டை 70 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக வைத்துள்ளனர்.

மக்களை அச்சுறுத்தும் விஜய் கட்-வுட்

சாத்தான்குளத்தில் இருந்து விஜயராமபுரம் செல்லும் சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த கட் அவுட்டானது சாலை அருகில் இருப்பதாகவும், அருகில் குடியிருப்பு வீடுகள், கடைகள் இருப்பதாலும் சரிந்து விழுந்தால் பெரிய ஆபத்து ஏற்படும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், இங்கு கட் அவுட் வைக்க விஜய் ரசிகர்கள் சார்பில் போலீசிடம் உரிய அனுமதி பெறாமல் இருந்ததும் தெரியவந்தது. மக்கள் அதிகம் கூடும் பகுதி என்பதால் சரிந்து விழுந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என கருதி சாத்தான்குளம் தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டனர்.

அப்புறப்படுத்திய போலீசார்
அப்போது இந்த கட் அவுட் அபாய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சிறுவர்களை வைத்து ஆபத்தான முறையில் அந்த கட் அவுட்டானது அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்-அவுட்’ஐ அப்புறப்படுத்திய போலீசார்

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் எஞ்சிய கட் அவுட்களை அப்புறப்படுத்தினர்.
நிறைய செலவு செய்து, இந்த கட்-அட்’ஐ விஜய் ரசிகர்கள் அமைத்தார்கள். ஆனால் உரிய முறையில் அனுமதி பெறாமலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் காவல்துறையினரால் இந்த கட்அவுட் அகற்றப்பட்டுள்ளதாக அப்போது மக்கள் கூறுகின்றனர்.