திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு நிபந்தனைகளுடன் உறுதி செய்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்துள்ளது.
“தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே…”
“திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம். தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே தூண் உள்ளது” என்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், “பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படும் என அரசு காரணம் காட்டுவது ஏற்கத்தக்கதல்ல என்றும், அரசியல் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படக் கூடாது என்றும் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பொதுமக்களுக்கு அனுமதியில்லை
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல் துறை, தொல்லியல் துறை, தேவஸ்தானம் முடிவு செய்யலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு
மேலும் நீதிபதிகள் உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு அரசு செயல்படக் கூடாது. பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல. மலையில் உள்ள தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. தூணில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தனர்.






