திருநெல்வேலியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஆபாசமாக திட்டியதுடன், பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான். 50 வயதாகும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அப்போது, அப்பெண் வீட்டில் தனியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
கலீல் ரகுமான் அந்தப் பெண்ணை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, அப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட நபரையும் கைது செய்துள்ளனர்.






