விஜய் தவெக கட்சியையும், திமுகவின் கூட்டணி கட்சிகளையும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்து பேசி உள்ளார்.
கருத்துக்கணிப்புகள் அதிமுவுக்கு சாதகம்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘‘கருத்துக் கணிப்புகள் தற்போது அதிமுகவுக்கு சாதகமாக வருகிறது. இந்த கருத்துக் கணிப்புகளை பார்த்து திமுக கலக்கமடைந்துள்ளது.”
கூட்டணிகளை அடிமைபோல நடத்தும் திமுக
திமுக தனது கூட்டணிக் கட்சிகளை அடிமைபோல் வைத்துள்ளது என விமர்சித்த அவர், அதனால்தான் அவர்கள் மக்கள் பிரச்னைகளைப் பற்றி வாய் திறக்காமல் உள்ளதாகவும் பேசியுள்ளார்.
மேலும், பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது அவர்கள் சொன்னதையெல்லாம் திமுக நிறைவேற்றினார்கள் எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.
தற்போது விஜய்யின் தவெக கட்சியை, திமுகவை விட அதிகம் அதிமுக தான் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.






