சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 25ஆம் ஆண்டு கொடி விழா கொண்டாடப்பட்டது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் தேமுதிக கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த்,  கூறியதாவது, “கூட்டணி குறித்த அறிவிப்பை தேமுதிக உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றும்,  நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் தான் கூட்டணி அமைப்போம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

“தேமுதிக எங்கள் கட்சி; என்ன முடிவு எடுக்க வேண்டும்; எப்போது அறிவிக்க வேண்டும் என்பதை உரிய நேரத்தில் எங்கள் கழத்தை சேர்ந்தவர்களிடம் கலந்து பேசி உறுதியாக அறிவிப்பேன்” என்றார்.

“நேரம் வரட்டும்; கூல்-ஆ இருங்க.. கூட்டணி குறித்து எங்களிடம் திரும்பத் திரும்ப கேட்காதீர்கள். திமுக-அதிமுக இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் தவறானது” என்பதை பிரேமலதா விஜயகாந்த் சுட்டிக்காட்டினார்.