“காங்கிரஸ் தலைமையில் இருப்பவர்கள் சொன்னால் பதில் சொல்லலாம்” என்று திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக குழு அமைத்து 36 நாட்கள் ஆகிவிட்டது. திமுக பதில் சொல்லவில்லை என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறி உள்ளார்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். நாங்கள் கட்டுப்பாடுடன் வளர்ந்தவர்கள். கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும்.

மாணிக்கம் தாகூர் எம்.பி. தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று குறிப்பிட்டார். இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால் அதற்கு பதில் சொல்லலாம் என்று பதலளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார் அமைச்சர் ஜ.பெரியசாமி.