தவெக தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பதாக குற்றம் சாட்டி விவாகரத்து நடிகை சங்கீதா கோரியுள்ளார்.நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ஆம் ஆண்டு எனக்கு தெரியவந்தது இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தானும், கணவர் விஜய்யும் பிரிந்து தான் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அவமானமாக இருக்கு சார்.!
எனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து அந்த நடிகை வெளியிட்டு வருவது தனக்கும், என் குழந்தைகளுக்கும் அவமானமாக உள்ளதாக விஜய்யின் மனைவி சங்கீதா வேதனை.
இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது.
இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம் என்று விவாகரத்து கோரிய மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார்.
“ஜீவனாம்சம்” வேண்டும்!
மேலும், விஜய்யின் சமூக
அந்தஸ்துக்கு ஏற்றவாறு நிரந்தர தீர்மான “ஜீவனாம்சம்” பெற்றுத் தர வேண்டும் என விவாகரத்து மனுவில் மனைவி சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் தவெக தலைவர் விஜய் உடன் நடிகை திரிஷாவை ஒப்பிட்டு பேசி அது சர்ச்சையானதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







