தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர். சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் .
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். புகழேந்தி மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோருடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலும் செயல்பட்டு வந்தார் ஜே.சி.டி.பிரபாகர்.
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் ஜே.சி.டி.பிரபாகர் வெற்றி பெற்றிருந்தார்.
“வீடுதோறும் விஜய் முழக்கம்”
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பிரபாகர், “எம்.ஜி.ஆரைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி ஏற்பட்டதோ அதேபோல் இன்று நான் விஜயை சந்தித்தபோது ஏற்பட்டது.
ஒரு அமைதிப் புரட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது; வீட்டுக்கு வீடு வீதியெங்கும் விஜய் முழுக்கமாக உருவாகிக்கொண்டிருக்கிறது;
தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் தேவையாக இருக்கிறது; அதற்காக விஜய் உடன் இணைந்து இருக்கிறேன்.” என்று தவெகவில் இணைந்த ஜேசிடி பிரபாகர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.






