இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் குறித்து மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை அமல்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் தவறான தகவல், டீப்பேக் மற்றும் மாயத் தகவல் பரவலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி AI பயன்படுத்தி உருவாக்கப்படும் எந்தப் பதிவாக இருந்தாலும் அது தெளிவாக “AI Generated” என குறிக்கப்பட வேண்டும் என்பது முக்கிய விதியாகும்.

என்ன மாற்றம்?
1. AI உள்ளடக்கத்திற்கு
கட்டாய லேபிள் படம், வீடியோ, ஆடியோ அல்லது உரை – எது இருந்தாலும் AI மூலம் உருவாக்கப்பட்டால் அது வெளிப்படையாக குறிப்பிடப்பட வேண்டும்.
2. பயனர்களின் அறிவிப்பு
AI கருவிகளை பயன்படுத்தி உள்ளடக்கம் வெளியிடும் நபர்கள் அதை அறிவிக்க வேண்டியிருக்கும்.
3. சமூக ஊடக தளங்களுக்கு பொறுப்பு
Facebook, X, YouTube போன்ற தளங்கள் AI குறிப்பு சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
4. லேபிள் இல்லா AI உள்ளடக்கத்திற்கு தடை
AI மூலம் உருவாக்கப்பட்டதாய் இருந்தும் குறிப்பு இல்லாமல் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

ஏன் இந்த நடவடிக்கை?
AI தொழில்நுட்ப வளர்ச்சியால் டீப்பேக் வீடியோக்கள், போலி செய்தி, அரசியல் தவறான தகவல் போன்றவை அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைவது, தேர்தல் போன்ற ஜனநாயக செயல்முறைகள் பாதிக்கப்படுவது போன்ற அபாயங்கள் உருவாகியுள்ளன.
அரசின் தெளிவான சிக்னல்
வைரலாகும் வேகத்தை விட உண்மை முக்கியம். அடையாள மறைவுக்கு பதிலாக பொறுப்புணர்வு அவசியம். மொத்தத்தில், ஏ.ஐ AI காலத்தில் தகவல் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா வெளிப்படைத்தன்மையை கட்டாயமாக்கும் திசையில் நகர்கிறது.






