திமுகவின் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக தம்பிதுரை, காங்கிரஸ் கிறிஸ்டோபர் திலக், பாமக அன்புமணி ராமதாஸ், தேமுதிக எல்.கே. சுதீஷ் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.க்களாகின்றனர்.
தம்பிதுரை 5 முறை மக்களவை உறுப்பினராகவும், அதில், இருமுறை மக்களவை துணைத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ஜோதிமணியிடம் தோல்வியடைந்த நிலையில், 2020-ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருச்சி சிவா தொடர்ந்து 6-வது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வாகவுள்ளார். பாமகவின் அன்புமணி ராமதாஸ் 3-வது முறையாக தேர்வாகவுள்ளார். இவர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே. சுதீஷ் ஆகியோர் முதல்முறையாக மாநிலங்களவைக்கு செல்லவுள்ளனர்.






