2026-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 20-ம் தேதி தொடங்குகிறது சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று(டிசம்பர் 26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” 2026-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர், ஜனவரி 20 காலை 9.30 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஆளுநர் வாசிப்பார்.

தமிழ்நாட்டில் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். பழைய மரபு படி தான் நடக்கும். அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டமன்றத்தின் மாண்பை நிச்சயமாக காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். இடைக்கால பட்ஜெட் குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.