மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் விழா, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
எம்ஜிஆர்’க்கு ஓபிஎஸ் மரியாதை
அந்தவகையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தனி கட்சி இல்லை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தனி கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் அழைப்பு வரவில்லை
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், வரும் 23ஆம் தேதி சென்னையில் மோடி பங்கேற்கவுள்ள, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கான மாபெரும் மாநாட்டிற்கான அழைப்பு இன்னும் தனக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்; தேமுதிக; விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்னும் தங்கள் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. அதேசமயம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி அமைக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






