சென்னை : தமிழ்நாட்டில் 5 ஐ.ஏ.எஸ். (IAS) அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

- இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையராக இருந்த இன்னசன்ட் திவ்யா, சுற்றுலா மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், சுற்றுலா மேலாண்மை இயக்குநராக இருந்த கிறிஸ்துராஜ், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக இருந்த விசாகன், தொழில்நுட்ப கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளராக இருந்த உமா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் செயலாளராக இருந்த ரத்னா, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






