திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தவெக கட்சியின் கிளை அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற செங்கோட்டையனை அக்கட்சித் தொண்டர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கிளை அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

செங்கோட்டையினை முற்றுகையிட்ட தொண்டர்கள்
புதிய அலுவலகத்தை திறந்து வைக்க, அக்கட்சியின் மாநில நிர்வாகக்குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்றபோது, அங்கு அவரை அக்கட்சியினர் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காத்திருக்கிறோம்..!
இதையடுத்து கிளை அலுவலகத்தை திறந்து வைத்த செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “தவெக-வில் டி.டி.வி, ஓபிஎஸ் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, மறைமுகமாக காத்திருக்கிறோம் என்றவாறு பதிலளித்தார்.
மேலும், தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு வருவதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார். இந்தாண்டு தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சி அமையும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.






