வரும் ஏப்ரல் 1 முதல் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மிக முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திட்டமிட்டுள்ளது.
புதிய நடைமுறைகள்:-
இனி ரொக்கப் பணம் கிடையாது
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் வாங்கும் முறை முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது. பயணிகள் அனைவரும் இனி FASTag அல்லது UPI போன்ற டிஜிட்டல் முறைகளில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.
- நோக்கம்: சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- தற்போதைய அபராதம்: தற்போது FASTag இல்லாமல் பணமாகச் செலுத்தினால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி அந்த ‘கேஷ் கவுண்டர்’களே இருக்காது என்பதால் டிஜிட்டல் முறை கட்டாயமாகிறது.
கட்டண உயர்வு..?
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
- வாகனங்களின் வகையைப் பொறுத்து (கார், லாரி, பேருந்து) சுமார் ₹5 முதல் ₹25 வரை கட்டணம் அதிகரிக்கப்படலாம்.






