“ஆண்கள் மனைவிய, காதலிய கூட்டிட்டு படத்துக்கு போங்க..ரெண்டு பேரும் சேர்ந்தே ஓசில போங்க” என்று அதிமகமு்ன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நகைச்சுவையாக பேசியது தற்போது சர்ச்சையாகி விட்டது.

ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்

விருதுநகர் மாவட்டம் ​சிவகாயில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துக் கொண்டார். அப்போது விழா மேடையில் பேசிய அவர், திமுக அரசு பெண்களுக்கு மட்டும் இலவச பயணத் திட்டத்தைக் கொடுத்து, கணவன் – மனைவியைப் பிரித்துவிட்டது என்று விமர்சித்தார்.

அதிமுக வாக்குறுதி:

2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஆண்களுக்கும் பேருந்துகளில் இலவச பயணம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.

கலகலப்பான கருத்து – ராஜேந்திர பாலாஜி

“இனி ஆண்கள் தங்கள் மனைவி அல்லது காதலியுடன் இலவசமாகப் பேருந்தில் சென்று சினிமா பார்க்கலாம்” என்று அவர் நகைச்சுவையாகப் பேசியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது..

திமுக அரசுக்கு எச்சரிக்கை:

தென் மாவட்டங்களைப் புறக்கணிப்பதாக திமுக அரசு மீது குற்றம் சாட்டிய அவர், மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடுவேன் என்றும் எச்சரித்தார்.

ராஜேந்திர பாலாஜி எப்போதுமே தனது அதிரடியான மற்றும் எதார்த்தமான பேச்சுகளுக்குப் பெயர் பெற்றவர் என்பதால், ஆண்களுக்கு இலவச பேருந்துக்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு குறித்து பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் நெட்டிசனங்களும் நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது