சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் 45 பவுன் நகைகள், ரூ.54,000 திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது.
திருப்புவனம் புவனேசுவரர் கோயில் அருகே மன்னர் குடியிருப்பைச் சேர்ந்தவர் புவனேந்திரன். இவர் அப்பகுதியில் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், இரவு நேரத்தில் இவர் வீட்டில் நுழைந்த கொள்ளை கும்பல் ஒன்று, பீரோவை உடைத்து, அதிலிருந்த 45 பவுன் நகைகள், ரூ.54,600 திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
வீட்டில் திருட்டு போன சம்பவம் குறித்து அறிந்த புவனேந்திரன், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினரும் விசாரணையை நடத்தினர். அதில், புவனேந்திரன் வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டப்படுகிறது. அதன்வழியாக அவரது வீட்டின் மாடிக்குச் சென்ற கொள்ளை கும்பல், பின்னர் கீழே இறங்கிச் சென்று முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
அந்தசமயத்தில் கணவன், மனைவி இருவரும் அருகேயுள்ள அறையில் தூங்கி கொண்டிருந்ததும் விசாரனையில், தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்தனர். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப் படைகளையும் அமைநதுள்ளனர்.






