தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளும் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் சென்ற வாரம் அறிவித்தார். இந்தக் குழுவில், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூன் உள்ளிட்ட 10 பேர் உள்ளனர்.
இந்நிலையில், நாளை மாலை 4.00 மணி அளவில், சென்னையில் பனையூரில் உள்ள தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில், தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், “தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், “இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பிரசாரக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, 2வது முறையாக டெல்லியில் உள்ள சி.பி.ஜ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகி, அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் தவிர கட்சியும், விஜய்யும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது






