தமிழக அரசு 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை (சின்னத்திரை விருதுகள்) விருதுகளையும் தற்போது அறிவித்துள்ளது.

இதில் சிறந்த சீரியல்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

​சிறந்த சீரியல்கள் (முதலிடம்):

​ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தொடராகத் தேர்வு செய்யப்பட்டவை:

  • 2014: வாணி ராணி
  • 2015: குலதெய்வம்
  • ​2016: மரகத வீணை
  • ​2017: நந்தினி
  • ​2018: நாயகி
  • ​2019: பாண்டவர் இல்லம்
  • ​2020: செம்பருத்தி
  • ​2021: பாக்கியலட்சுமி
  • 2022: எதிர்நீச்சல்

சிறந்த நடிகர்

  • எம்.ராஜ்குமார்
  • ஆர்.பாண்டியராஜன்
  • கௌசிக்
  • கிருஷ்ணா
  • தலைவாசல் விஜய்
  • வ.சஞ்சீவ்
  • ஜெய் ஆகாஷ்
  • கார்த்திக் ராஜ்
  • சஞ்சீவ்

சிறந்த நடிகைகள்

  • ராதிகா சரத்குமார்
  • வாணி போஜன்
  • நீலிமாராணி
  • சங்கவி
  • ரேவதி
  • ரேஷ்மா
  • சபானா ஷாஜகான்
  • கேப்ரியல்லா செல்லஸ்
  • சைத்ரா ரெட்டி

பரிசு விவரங்கள்:

  • ​சிறந்த சீரியலுக்கு முதல் பரிசாக 2 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
  • ​சிறந்த நடிகர், நடிகை மற்றும் இதர கலைஞர்களுக்கு தங்கப் பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

​இந்த விருதுகளும் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று நடைபெறும் விருது விழாவிலேயே வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, மறைந்த நடிகர் மாரிமுத்து அவர்களுக்கு (எதிர்நீச்சல்) சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது