நடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்ட போது பல்வேறு விமர்சனங்கள் எந்த சர்ச்சைக்கு துணை முதல்வர் உதவி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும்  விழா விமரிசையாக நடைப்பெற்றது.

விருது அறிவிக்கப்பட்ட வெள்ளித்திரை கலைஞர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

அப்போது மேடையில் பேசிய அவர், “இந்தியாவிலேயே துடிப்பான சினிமா துறை என்றால் அது தமிழ் சினிமா துறை என்றால் மிகையாகாது என்றும் ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான திரைப்படங்களை தமிழ் சினிமா துறை கொடுக்கிறது” என்று குறிப்பிட்டார்.

“உங்களில் இருந்து உருவாகி வந்தவன் நான்; ரொம்ப நாள் கழித்து பள்ளிக்கு வந்ததுபோன்ற உணர்வு இருக்கிறது” என்று கூறினார்.

“தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டதும் நிறைய விமர்சனங்கள் வந்தன.
தேர்வுக்குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன என்று உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்தார்.

“கலைத் துறைக்கு பெருமை தேடித் தரும் மற்ற கலைஞர்களுக்கும் நிச்சயம் உரிய அங்கீகாரம் கிடைக்கும்” என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.