கடந்த வாரம் வரை தங்கம் மற்றும் வெள்ளி விலை பல
மடங்கு உயர்ந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக, மிக குறைந்து வருகிறது. தங்கம் ஒரு பவுன் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை கிட்ட விற்பனையான தங்கம் இன்று ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது.

நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும், சவரனுக்கு ரூ.5,040 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320க்கும், சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.