சத்துணவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அதிரடியான முக்கிய அறிவிப்புகளை சட்டமன்றத்தின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

1.கலைஞர் கனவு இல்லம்
கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
2. சாலைகள் மேம்பாடு
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டின் கீழ் ரூ.1,088 கோடியில் 2,200 ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
3) சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் பணியாளர்கள் உயிரிழந்தால், இறுதிச்சசங்குக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
4) அங்கன்வாடி உதவியளர்கள், சமையலர்கள், தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5) பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
6) பகுதி நேர ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்பும்போது, பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக வருவதற்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களின் பணிக்காலத்துக்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் போன்ற அறிவிப்புகளை சட்டமன்றத்தின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது






