நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் “விசில்” (Whistle) சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

​சமீபத்தில் வெளியான தகவலின்படி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக தவெக கட்சிக்கு இந்தச் சின்னம் பொதுச் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது.


10 சின்னங்களை அனுப்பிய ‘தவெக’

​தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் சுமார் 10 சின்னங்கள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டது. அதில் விசில், ஆட்டோ, மைக் போன்ற சின்னங்கள் இடம் பெற்றிருந்தன.
​இதில் தவெக-வின் முதல் விருப்பமாக இருந்த ‘விசில்’ சின்னத்தையே தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தில் விசில் ஒரு முக்கிய அடையாளமாக இருந்ததால், இது தொண்டர்களிடையே எளிதில் சென்றடையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

நிரந்தரமான சின்னம் கிடையாது.?

​தவெக தற்போது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி என்றாலும், அது அங்கீகரிக்கப்படாத கட்சி. இதனால், இந்தச் சின்னம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டுமே தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
​இந்தத் தேர்தலில் கட்சி ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை (சுமார் 6%) அல்லது இடங்களை வென்று ‘மாநிலக் கட்சி’ அந்தஸ்தைப் பெற்றால், எதிர்காலத்தில் இந்தச் சின்னத்தையே நிரந்தரச் சின்னமாகப் பெற முடியும்.

​கமலுக்கு மீண்டும் ‘டார்ச் லைட்’

​இதே சமயத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் ‘டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
​நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னும் உறுதி செய்யவில்லை.